நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் நிலநடுக்கம்

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Bella Dalima 16-03-2023 | 3:03 PM

New Zealand: நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) காலை ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், 300 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மக்கள் யாரும் வசிக்காத இந்த தீவின் கரையோரப் பகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நேற்று வெலிங்டன் அருகே  6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நியூசிலாந்து உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசுபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. இருப்பினும், நாடு முழுவதும் நிலநடுக்க அளவில் மாறுபாடு உள்ளது. Ring Of Fire என்று அழைக்கப்படும் தீவிர நில அதிர்வு நடவடிக்கையின் விளிம்பில் நியூசிலாந்து உள்ளதால், தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் ஏற்படுகின்றன.