.webp)
Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 17 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வீடொன்றில் தங்கியிருந்த 17 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 09 ஆண்களும் 05 பெண்களும் 03 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.