.webp)
தென் ஆபிரிக்க கரையோரப் பகுதிகளை ஃப்ரெடி (Freddy) புயல் மீளவும் தாக்கியுள்ளது.
Freddy புயலினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
இந்த அனர்த்தத்தினால் மலாவி, மொசாம்பிக் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலாவியில் மாத்திரம் 190 பேர் உயிரிழந்துள்ளதோடு, மொசாம்பிக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளது.