தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்ய தீர்மானம்

நாளை (16) காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

by Bella Dalima 15-03-2023 | 3:00 PM

Colombo (News 1st) தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால், நாளை (16) காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது. 

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இதனை குறிப்பிட்டது. 

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் தமது தொழிற்சங்க கூட்டமைப்பிலுள்ள அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்  மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன் இரத்னசிங்கம் குறிப்பிட்டார்.