இம்ரான் கானை கைது செய்ய தடை

இம்ரான் கானை நாளை (16) காலை 10 மணி வரை கைது செய்ய தடை

by Bella Dalima 15-03-2023 | 7:03 PM

Pakistan: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நாளை (16) காலை 10 மணி வரை கைது செய்ய தடை விதித்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் ஃபவாத் சவுத்ரி தாக்கல் செய்த மனு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் வீட்டிற்கு வௌியே இடம்பெறும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமெனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று பிற்பகல் வேளையில் இம்ரான் கானின் இல்லத்தின் முன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக கடமையாற்றிய போது, சர்வதேச நாடுகளிலிருந்து அரசாங்கத்தின் சார்பில் கிடைக்கப்பெற்ற சிறப்பு பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் மன்றில் ஆஜராகாததால், இம்ரான் கானை கைது செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.