.webp)
Colombo (News 1st) உடன் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து ரயில் ஊழியர்களதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட லொக்கோமோட்டிவ் (Locomotive) ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ள பின்புலத்தில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்கி கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.