பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

by Bella Dalima 14-03-2023 | 3:13 PM

Papua New Guinea: கிழக்கு பப்புவா நியூ கினியாவில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்  தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம்  Port Moresby-க்கு வட- வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில், 200 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. 

இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.