தபால் தொழிற்சங்க முன்னணி பணிப்பகிஷ்கரிப்பு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 14-03-2023 | 7:05 PM

Colombo (News 1st) ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (14) நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்துள்ளது.

நாளை தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகி வருகின்ற நிலையில், அந்த சங்கம் இன்று பல தபால் நிலையங்களுக்கு முன்பாக எதிர்ப்பிலும் ஈடுபட்டது.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு முன்பாக பிரதான எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மாத்தறை, அனுராதபுரம், குருநாகல் உள்ளிட்ட முக்கிய தபால் நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 653 தபாலகங்கள், 3610 உப தபால் நிலையங்கள் ஆகியவற்றின் சுமார் 26,000 ஊழியர்கள் கடமையிலிருந்து விலகுவார்கள் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க  முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார்.