95ஆவது ஒஸ்கார் விருது விழா

95ஆவது ஒஸ்கார் விருது விழா

95ஆவது ஒஸ்கார் விருது விழா

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2023 | 3:04 pm

Colombo (News 1st) 95ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக இன்று(13) நடைபெற்றது.

இந்த நிகழ்வு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலீஸ் நகரிலுள்ள டொல்பி அரங்கில் இடம்பெற்றது.

இம்முறை 'Everything Everywhere All at Once' திரைப்படம் 07 ஒஸ்கார் விருதுகளை தன்வசப்படுத்தியது.

ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஹொலிவூட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலான நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

⭕ சிறந்த நடிகர் – Brendan Fraser (The Whale திரைப்படம்)

⭕ சிறந்த நடிகை – Michelle Yeoh (Everything Everywhere All at Once திரைப்படம்)

⭕ சிறந்த துணை நடிகர் – Ke Huy Quan (Everything Everywhere All at Once திரைப்படம்)

⭕ சிறந்த துணை நடிகை – Jamie Lee Curtis (Everything Everywhere All at Once திரைப்படம்)

⭕ சிறந்த பாடல் – நாட்டு நாட்டு பாடல் (RRR திரைப்படம்)

⭕ சிறந்த காட்சி வடிவமைப்புக்கான ஒஸ்கார் விருதினை Avatar: The Way of Water வென்றது

⭕ சிறந்த ஆவணக் குறும்படம் – The Elephant Whisperers

62 வருடங்களின் பின்னர் இந்த தடவை செங்கம்பளமின்றி ஷெப்பெயின் நிறமான பளுப்பு மஞ்சள் நிறத்தில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்