17 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் கைப்பற்றல்

17 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது

by Staff Writer 13-03-2023 | 3:42 PM

Colombo (News 1st) 17 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேஸிலில் இருந்து வருகை தந்த மலேசிய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

54 வயதான சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிடம் ஒப்படைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.