.webp)

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான பிடியாணை இன்று(13) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தினால் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் விமல் வீரவன்ச ஆஜராகாமையினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
