வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணை

மத்திய மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளுக்கு முன்னர் வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணை

by Staff Writer 11-03-2023 | 5:25 PM

Colombo (News 1st) மத்திய மாகாண பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளுக்கு முன்னர் வினாத்தாள்கள் வௌியாகியமை தொடர்பில் விசாரணை 

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகள் இடம்பெறுவதற்கு முன்னர், வினாத்தாள்கள் வௌியாகியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பௌத்தம், ஆங்கிலம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களே வெளியாகியுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாச குறிப்பிட்டார். 

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.