நீதிமன்றத்திற்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது

தொலவத்த, சேமசிங்கவின் சிறப்புரிமைக் கேள்விகள் நீதிமன்ற சுயாதீனத்திற்கு அழுத்தம் விடுக்கின்றன: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

by Staff Writer 11-03-2023 | 7:34 PM

Colombo (News 1st) பிரேமநாத் C.தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விகள் நீதித்துறையின் சுயாதீனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஊடக அறிக்கை மூலம் உறுதியளித்துள்ளது.

நீதிமன்ற சுயாதீனம் என்பது இலங்கை மக்களின் உரிமை எனவும் பிரஜை மற்றும் அரசுக்கு இடையிலான மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான நீதியை உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமான நீதித்துறை அவசியம் என்பதை அனைத்து அரச நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.