.webp)

Colombo (News 1st) தொழுநோயாளர்களை அடையாளம் காண்பதற்காக குடியிருப்பு மட்டத்தில் பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு செயற்றிட்டம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஓர் நாளில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மாத்திரம் இரண்டு தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு செயற்றிட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
கடந்த வருடம் நாட்டில் 1400-க்கும் அதிகமான தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 246 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
