தங்கம் விலை 5000 ரூபாவால் அதிகரிப்பு

தங்கம் விலை 5000 ரூபாவால் அதிகரிப்பு

by Bella Dalima 10-03-2023 | 3:23 PM

Colombo (News 1st) நாட்டில் தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.

1,95,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கம் நேற்றைய தினத்தில் 1,40,000 ரூபா வரை குறைவடைந்ததாக இலங்கை தங்காபரண சங்கத்தின் செயலாளர் இரத்னராஜா சரவணன் குறிப்பிட்டார்.

எனினும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் இன்று 1,45,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, 22 கரட் தங்க நகையானது சேதாரம், செய்கூலியுடன் 1,45,000 ரூபா முதல்  1,55,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தங்காபரண சங்கத்தின் செயலாளர் இரத்னராஜா சரவணன் தெரிவித்தார்.