.webp)
Colombo (News 1st) அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று பகல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அடக்குமுறை, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் பொலிஸார் பிரவேசித்தமை உள்ளிட்ட விடயங்களுக்கு இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.