குறைநிரப்பு பிரேரணைகள் சமர்ப்பிப்பு

ஜனாதிபதியின் அலுவலக செலவுகளை ஈடு செய்ய 1800 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Bella Dalima 09-03-2023 | 7:35 PM

Colombo (News 1st) எல்லை நிர்ணய குழுவின் செலவீனங்களை ஈடு செய்வதற்காக 7.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகையை ஒதுக்குவதற்கான   குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் அலுவலக செலவுகளை ஈடு செய்யும் வகையில், மேலும் 1800 மில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த இரண்டு குறை நிரப்பு பிரேரணைகளுடன் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் சட்ட நிறுவனங்களின் செலவுகளை ஈடு செய்யும்  ஆறு  குறைநிரப்பு பிரேரணைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.