ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்பு

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்பு

by Staff Writer 07-03-2023 | 3:15 PM

Colombo (News 1st) வவுனியாவில் வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா குட்ஷெட் வீதியின் உள்ளக வீதியிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

09 மற்றும் 03 வயதான சிறுமிகள் இருவர், அவர்களின் பெற்றோர் ஆகியோரது சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் நண்பர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

தந்தை தூங்கில் தொங்கிய நிலையிலும் தாய் கட்டிலில் சடலமாகவும் மீட்கப்பட்டதுடன், பிள்ளைகள் இருவரும் இருக்கையிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் நால்வரும் நேற்றிரவு உயிரிழந்திருக்கலாம் என வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் வடமாகாண கிரிக்கெட் சபையில் கடமையாற்றியதுடன், அவருடைய மனைவி ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.