இன்றும்(07) சில ரயில் சேவைகள் இரத்து

இன்றும்(07) சில ரயில் சேவைகள் இரத்து - ரயில்வே திணைக்களம்

by Staff Writer 07-03-2023 | 11:41 AM

Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும்(07) சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சாரதிகள் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அளுத்கமவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில், கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணிக்கவிருந்த இரு ரயில்கள், நானுஓயாவிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த ரயில் மற்றும் மஹவயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில் ஆகியன இன்று(07) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த ​கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு உதயதேவி ரயில் மற்றும் கொழும்பு - புத்தளம் ரயிலும் இன்று(07) மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.