.webp)
Colombo (News 1st) பிரபல இந்திய நடிகர் அமிதாப் பச்சன் (80) படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் சிக்கி காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
அமிதாப் பச்சனின் நடிப்பில் உருவாகி வரும் “Project K” படப்பிடிப்பு தளத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தின் போது அவரது விலா எலும்பு முறிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
200-இற்கும் அதிக திரைப்படங்களில் நடித்துள்ள அவர், உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்ட ஒருவராவார்.