சாரதிகள் இன்மையால் சில ரயில் சேவைகள் இரத்து

சாரதிகள் இன்மையால் சில ரயில் சேவைகள் இரத்து

by Staff Writer 06-03-2023 | 3:12 PM

Colombo (News 1st) சாரதிகள் இன்மை காரணமாக இன்று(06) சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கோட்டை -  மட்டக்களப்பு உதயதேவி ரயில் சேவை, கோட்டை - புத்தளம் மற்றும் களுத்துறை இடையிலான 5 ரயில் சேவைகள் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ரயில் போக்குவரத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் சாரதிகளை இணைத்துக்கொள்வது தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் வினவியுள்ள போதிலும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.