கொட்டகலையில் 3 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

கொட்டகலையில் 3 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

by Staff Writer 06-03-2023 | 3:06 PM

Colombo (News 1st) ஹட்டன் - கொட்டகலை நகரில் நேற்றிரவு(05) பரவிய தீயில் 03 வர்த்தக நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

நேற்றிரவு(05), 09 மணியளவில் வர்த்தக நிலையங்களில் தீ பரவியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

நுவரெலியா தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.