.webp)
Colombo (News 1st) 18 ஆம் வளைவு பகுதியின் 14 ஆவது வளைவிற்கு அருகில் கற்பாறை சரிந்து வீழ்ந்தமையால் மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் ஒரு பாதையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமது நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், குறித்த பகுதிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர், கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வீதியில் சரிந்து வீழ்ந்த பகுதியில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.