கம்மெத்தவினால் கருவலகஸ்வெவ மக்களுக்கு நீர் சுத்திகரிப்பு திட்டம்

by Staff Writer 05-03-2023 | 2:23 PM

Colombo (News 1st) கம்மெத்தவினால் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்புத் திட்டம் இன்று(05) மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

குருணாகல் - கல்கமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கருவலகஸ்வெவ யாய 5 கிராமத்தில் இந்த நீர் சுத்திகரிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்மூலம் சுமார் 500 குடும்பங்கள் பயன்பெறவுள்ளனர்.

இந்த செயற்றிட்டத்திற்கு காமினி பொன்சேகா மற்றும் T.K.A.D.செனரத் உள்ளிட்டவர்களால் அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.