.webp)
Colombo (News 1st) வெல்லம்பிட்டி சந்தி முதல் கொலன்னாவை சந்தி வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கண்காணிப்பின் கீழ் தனியார் நிறுவனம் ஒன்றினால் குறித்த பகுதியில் நீர்க்குழாய்கள் பதிக்கப்படவுள்ளன.
இதன் காரணமாக வெல்லம்பிட்டிய சந்தி முதல் கொலன்னாவை சந்தி வரையிலான வீதியை இன்று காலை 9 மணி முதல் நாளை நண்பகல் 12 மணிவரை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்கள், அவிசாவளை வீதியின் கொட்டிகாவத்தை சந்தியில் இடது புறம் திரும்பி, கொத்தட்டுவை நகரில் கொலன்னாவை ஊடாக தெமட்டகொடை நோக்கி பயணிக்க முடியும்.
கொழும்பிலிருந்து வௌியேறும் வாகனங்கள், தெமட்டகொடை - கொலன்னாவை வீதியின் கொலன்னாவை சந்தியில் வலது புறம் திரும்பி, கொத்தட்டுவை நகரில் இடது புறமாக திரும்பி, கொட்டிகாவத்தை நகரில் வலது புறமாக திரும்பி அவிசாவளை - கொழும்பு வீதியை அடைய முடியும்.
அத்துடன், தெமட்டகொடை - கொலன்னாவை வீதியின் கொலன்னாவை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அருகில் இடது புறம் திரும்பி, மீத்தொட்டமுல்ல வீதி ஊடாக மீண்டும் அவிசாவளை - கொழும்பு வீதியின் ஊடாகவும் கொழும்பில் இருந்து வௌியேற முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.