கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

by Bella Dalima 03-03-2023 | 5:26 PM

Colombo (News 1st) கொள்கை வட்டி வீதத்தை (Policy Interest Rates) ஒரு வீதத்தால் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வட்டி விகிதங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate - SDFR)  15.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியினால் கடனுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் (Standing Lending Facility Rate - SLRF) 16.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் பணவீக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.