இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம்

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம்

by Bella Dalima 02-03-2023 | 4:42 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக கடல் வழியாக பயணித்த போது, படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகி வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அன்றாட தேவைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான  உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், இந்த விடயம் குறித்து UNHCR மற்றும் IOM ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.