கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு உதவத் தயார்

அதிக கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு உதவத் தயார்: சீன பிரதமர்

by Bella Dalima 02-03-2023 | 5:36 PM

Colombo (News 1st) அதிக கடன் சுமையை சந்தித்துள்ள நாடுகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவுவதற்காக  பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராகவுள்ளதாக சீன பிரதமர் Li Keqiang தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva உடன் தொலைபேசியில் நேற்றைய தினம்  கலந்துரையாடிய போது, சீன பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். 

குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் கடன் பிரச்சினையை தீர்ப்பதில் முக்கிய பங்காற்ற சீனா தயாராகவுள்ளதாக  சீன பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.