போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

by Chandrasekaram Chandravadani 01-03-2023 | 11:00 AM

Colombo (News 1st) மூன்று கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 9 கிராம் 100 மில்லி கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 248,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் திருடப்பட்ட தங்கச் சங்கிலி, திருட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அம்பாலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.