சிறுபோகத்திற்கு தேவையான பசளை கையிருப்பில் உள்ளது

சிறுபோகத்திற்கு தேவையான அடிக்கட்டுப்பசளை கையிருப்பில் உள்ளது - விவசாய அமைச்சு

by Staff Writer 01-03-2023 | 7:30 AM

Colombo (News 1st) சிறுபோகத்திற்கு தேவையான அடிக்கட்டுப்பசளை(TSP) கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுபோக விவசாயச் செய்கைக்கு 35000 மெட்ரிக் தொன் அடிக்கட்டுப்பசளை தேவைப்படுவதாக இலங்கை கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர், பேராசிரியர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார். 

குறித்த பசளை தொகையை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களினூடாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, சிறுபோகத்திற்கு தேவையான 55000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்ட விவசாய அமைச்சு, மேலும் 20000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை விரைவில் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிறுபோக விவசாயச் செய்கையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.