2016 இன் பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை ஒப்புதல்

by Bella Dalima 28-02-2023 | 7:18 PM

Colombo (News 1st) 2016  ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. 

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியமாக அவர்களுடைய அடிப்படைச் சம்பளத்தில் இருந்து  8 வீதமும் தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12 வீதமும் மாதாந்த உத்தேச நிதியத்தில் வைப்பிலிடப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். 

முன்மொழியப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய நிதியை நிர்வகிப்பதற்கு நிர்வாகக் குழுவால் நிர்வகிக்கப்படும் ஒரு சுயாதீன நிதியம் ஸ்தாபிக்கப்பட்டு, அதனை  நிர்வகிப்பதற்கு சிறப்புத் தகைமையுடைய முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.