பாடசாலை மாணவர்களுக்கு உதவ 'திவி சவிய' வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

by Bella Dalima 28-02-2023 | 6:14 PM

Colombo (News 1st) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திவி சவிய (Divi Saviya) வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்றது.

LOLC நிறுவனம் இத்திட்டத்தில் இணைந்துள்ளது.

கல்வி அமைச்சும் இந்த வேலைத் திட்டத்துடன் கைகோர்த்துள்ளது.

LOLC குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கபில ஜயவர்தன , கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பண விழா நடைபெற்றது.

100-க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் அப்பியாசக் கொப்பிகளும் பாடசாலை உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

ஒரு பில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.