நியூஸ்ஃபெஸ்டிற்கு இடர் முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் கூட்டமைப்பின் சர்வதேச விருது

by Bella Dalima 28-02-2023 | 5:24 PM

Colombo (News 1st) இடர் முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் கூட்டமைப்பின் (A-PAD)விருது நியூஸ்ஃபெஸ்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இன்று (28) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. 
  
A-PAD-இன் 10 ஆவது ஆண்டு விழாவையொட்டி,  International House of Japan-இல் நடைபெற்ற விழாவில், டிஜிட்டல் விவகார அமைச்சர் Tara Kono, வெளியுறவுத் துறை அமைச்சர் Takei Shunsuke உள்ளிட்ட ஜப்பானிய அரச உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

APad Sri Lanka-இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் APAD சர்வதேச பிரதான செயற்பாட்டு அதிகாரியுமான Firzan Hashim இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். 

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களின் தீவிர நிலையின் போது கடமையாற்றியதற்காகவும் பல தசாப்தங்களாக மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதற்காகவும் நியூஸ்ஃபெஸ்டிற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இலங்கையில் பேரிடர் காலத்தில் நிவாரணங்களை வழங்கியமை,  தயார்ப்படுத்தல், விழிப்புணர்வூட்டல்,  தேடுதல்,மீட்புப் பணிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பல தசாப்தங்களாக மனிதாபிமான பணிகளில் சிறப்பாக செயற்பட்டு, இலங்கைக்கு வழங்கிய புத்தாக்க தலைமைத்துவத்திற்காக நியூஸ் ஃபெஸ்டிற்கு விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் நிறைவேற்று குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் மற்றும் நியூஸ்ஃபெஸ்ட் அலைவரிசை பிரதானி சுரங்க சேனநாயக்க ஆகியோர் நியூஸ்ஃபெஸ்ட் சார்பில் பெற்றுக்கொண்டனர். 

இடர் முகாமைத்துவத்திற்கான ஆசிய பசுபிக் கூட்டமைப்பு (A-PAD) என்பது பேரிடர் கால உதவிகளை நாடு கடந்து முன்னெடுக்கும் ஓர் அமைப்பாகும்.  இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பையும் புரிதலையும் எளிதாக்கும் வகையில் செயல்படுகிறது. ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன.