வேலன் சுவாமிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தவத்திரு வேலன் சுவாமிகளுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 28-02-2023 | 7:05 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 15  ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்த போது எதிர்ப்பில் ஈடுபட்டமைக்காக தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பதில்  நீதவான் கே.தவபாலன் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கில் மேலும் சில சந்தேகநபர்களை இணைத்துக்கொள்ள வேண்டியிருப்பதால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது,  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க செயலாளர், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் மன்றில் ஆஐராகியிருந்தனர்.

வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜராகியிருந்தார்.