இந்தியா செல்கிறார் அலி சப்ரி

இந்தியா செல்கிறார் அலி சப்ரி

by Staff Writer 28-02-2023 | 4:22 PM

Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எதிர்வரும் 02 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாடடில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் தங்கவுள்ளார்.