QR முறைமையை இரத்து செய்யும் தீர்மானம் இல்லை

QR முறைமையை இரத்து செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை - அமைச்சர் கஞ்சன

by Staff Writer 27-02-2023 | 2:19 PM

Colombo (News 1st) எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் QR முறைமையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் இரத்து செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது காணப்படும் கோட்டா முறைமையை கட்டம் கட்டமாக அதிகரிப்பது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.