ஜனாதிபதியால் வர்த்தமானி வௌியீடு

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 27-02-2023 | 9:38 PM

Colombo (News 1st) துறைமுகம், விமான நிலையம், போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம்,  துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள், பானம், நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றை வெளியேற்றுதல், கொண்டு செல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்காக தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் பாதைகள் உள்ளிட்ட  வீதியூடான, ரயில் மூலமான அல்லது வான் மூலமான போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குதலும் பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.