.webp)
Colombo (News 1st) திருகோணமலை - தோப்பூர் பகுதியில் உழவு இயந்திர கலப்பையில் சிக்குண்டு இளைஞரொருவர் இன்று(26) உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்கி தோப்பூர் - செல்வநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
சாரதியும் உயிரிழந்த இளைஞரும் உழவு இயந்திரத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த வேளை, உழவு இயந்திரம் பின்புறமாக இயக்கப்பட்டமையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மூதூர் பகுதியில் கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கடந்த 24ஆம் திகதி கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த ஒருவரே இன்று(26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.