பிக்கு மாணவர்களின் ஒழுக்க மீறல்களை ஆராய நடவடிக்கை

பெளத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் பிக்கு மாணவர்களின் ஒழுக்க மீறல்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

by Bella Dalima 25-02-2023 | 3:43 PM

Colombo (News 1st) பெளத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரங்களை விடுதி பொறுப்பாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பிக்கு மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம், ஒழுக்காற்று அதிகாரியையோ அல்லது அது தொடர்பான அதிகாரங்களைக் கொண்ட அதிகாரியையோ நியமிக்கவில்லை.

புதிய அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம்  பிக்கு மாணவர்களின் ஒழுக்க மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுக்க முடியும் என அதன் உபவேந்தர் பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (27) திறக்கப்படவுள்ளது.