.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன ரட்ணசிங்கம் கூறினார்.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் ஜனவரி மாதம் முதல் 36% வரை வரி அறவிடும் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இன்று அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
