வடக்கு கடற்பரப்பில் கைது 15 பேர்

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது

by Bella Dalima 24-02-2023 | 3:09 PM

Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 பேர் வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 

யாழ்ப்பாணம் - மண்டைத்தீவு மற்றும் வெற்றிலைக்கேணிக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் நேற்று அதிகாலையிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்துக்கொண்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டதுடன், 4 படகுகளும் 789 கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட உள்ளூர் மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.