கைதான பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு பெப்ரவரி 27 வரை விளக்கமறியல்

by Bella Dalima 24-02-2023 | 7:08 PM

Colombo (News 1st) கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து எதிர்ப்பில் ஈடுபட்ட போது கைதான பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் பெப்ரவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இன்று (24) பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவும் உள்ளடங்குகின்றார். 

இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து எதிர்ப்பில் ஈடுபட்டமை தொடர்பில் ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 57 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.