.webp)
Colombo (News 1st) நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பெரும்போக சோள செய்கையில் ஒரு கிலோகிராம் சோளத்தை 160 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய கால்நடை வளர்ப்பாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
விவசாய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பெரும்போக செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் கலந்துரையாடப்பட்டு, 160 ரூபாவிற்கு சோளத்தை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
சோள செய்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், தற்போது சோளத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.