யாழ்.மறைமாவட்ட ஆயர், நல்லை ஆதின குரு முதல்வர் ஆகியோரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்

by Staff Writer 23-02-2023 | 12:51 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்று(23) காலை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்.ஆயர் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பின்னர் நல்லூருக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர், நல்லை ஆதின குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ  சோமசுந்தர தேசிக ஞானம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தேர்தல் பிரசாரக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அனலைதீவு, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை மூளாய் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(23) நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கவுள்ளார்.