.webp)
Colombo (News 1st) பிட்டிபன பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் பிக்கு மாணவர்கள் சிலர் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த சிலரும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
இதன்போது, பொலிஸாரால் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று (22) முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகத்தின் போது பொலிஸார் நடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிக்கு மாணவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தை திறக்குமாறு கோரி நேற்று பிக்கு மாணவர்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த போது, அதனை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.