பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் பலி

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

by Staff Writer 23-02-2023 | 12:16 PM

Colombo (News 1st) கட்டுநாயக்க - மெதவெல பிரதேசத்தில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குற்றச்செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்காக சென்ற போது சந்தேகநபர், பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதன்போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஹீனடியன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தினேஷ் புத்திக என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.