அரசின் தீர்மானம் நியாயமற்றது: இலங்கை திருச்சபை

தேர்தல் நிதியை நிறுத்தும் அரசின் தீர்மானம் நியாயமற்றது: இலங்கை திருச்சபை அறிக்கை

by Bella Dalima 23-02-2023 | 7:11 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது எனவும் தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை திருச்சபை அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது. 

சில தினங்களுக்கு  முன்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசுக்கு தேர்தல் நிதியை நிறுத்த  எந்த தார்மீக உரிமையும் இல்லை என இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளின் கடன்களை மீள செலுத்த தவறிய பிறகும், தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசாங்கமும் பதவியில் நீடிக்க சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.