பிக்கு மாணவர்கள் சத்தியாகிரகம்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரி பிக்கு மாணவர்கள் சத்தியாகிரகம்

by Bella Dalima 22-02-2023 | 8:04 PM

Colombo (News 1st) பௌத்த  மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரி பிக்கு மாணவர்கள் சத்தியாகிரகம் 

பௌத்த  மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு  கோரி பிக்கு மாணவர்கள் தற்போது சத்தியாகிரக  போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

இன்று பிற்பகல் சத்தியாகிரகத்தை ஆரம்பித்த போது பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டமையினால், அமைதியின்மை ஏற்பட்டது. பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 
 
பொலிஸார்  சென்றதன் பின்னர் பிக்கு மாணவர்கள் சத்தியாகிரக போராட்டத்தினை முன்னெடுத்தனர். 

சத்தியாகிரக  போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்திற்கு தற்போது அதிகளவிலான பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.