பண்டாரவளையில் விபத்தில் 22 பேர் காயம்

பண்டாரவளையில் தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்திற்குள்ளானது; 22 பேர் காயம்

by Bella Dalima 22-02-2023 | 4:44 PM

Colombo (News 1st) பண்டாரவளை - மல்வத்தையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

மல்வத்தையிலுள்ள குறுக்கு வீதியொன்றில் பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. 

தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறியே இன்று மாலை 3.30 மணி அளவில் விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் தியத்தலாவ வைத்தியசாலையிலும் ஏனையோர் பண்டாரவளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெலுவ மற்றும் சென். ஜேம்ஸ் உள்ளிட்ட தோட்டங்களை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்களே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.