குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் கைது

இலங்கையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் மண்டபம் முகாமில் கைது

by Bella Dalima 22-02-2023 | 3:26 PM

Colombo (News 1st) இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தப்பிச்சென்ற இளைஞர் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கு எதிராக இலங்கையில் குற்ற வழக்குகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மன்னாரை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே கரையோர பாதுகாப்பு பொலிஸாரால் மண்டபம் முகாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞரின் தந்தை ஏற்கனவே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மண்டபம் அகதி முகாமில் தங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த இளைஞர் தனது தந்தையுடன் இணையும் நோக்குடன் அங்கு சென்றுள்ளார். அவருக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது